மாங்கல்ய பாக்கியம்!
ADDED :3437 days ago
ஆதிரை என்ற பெண்மணி முதலிரவில் தன் கணவனை இழந்தாள். அவள் சிவபெருமானிடம் போராடி தன் கணவனை மீட்டாள். மேலும், வான மண்டலத்தில் நட்சத்திர அந்தஸ்தும் பெற்றாள். அவளது பெயராலேயே, திருவாதிரை விழா உண்டானதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கர்ணபரம்பரைக் கதை இருக்கிறது. சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலுக்கு திருவாதிரையன்று ஏராளமான புதுமணத் தம்பதிகள் வருவார்கள். மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் பிரார்த்திப்பார்கள்.