உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தராபுரம் காமாட்சியம்மன் கோவில் விழா

சுந்தராபுரம் காமாட்சியம்மன் கோவில் விழா

குறிச்சி: சுந்தராபுரம் அருகே லோகநாதபுரம், முதலியார் வீதியிலுள்ள காமாட்சியம்மன் கோவில், 38ம் ஆண்டு விழா, 17ல் கணபதி பூஜையுடன்  துவங்கியது. தொடர்ந்து உதய கால, உச்சிகால பூஜைகள், மகா தீபாராதனை, புஷ்பாஞ்சலி, திருவிளக்கு பூஜை நடந்தன. 24ல் அரண்மனை விளக்கு  அழைத்தல், அணிக்கூடை கோவிலுக்கு அழைத்து வருதல், அம்மன் அழைத்து வருதல் மற்றும் திருக்கல்யாணம் ஆகியவை நடந்தன. நேற்று  முன்தினம் குறிச்சி பொங்காளியம்மன் கோவிலிலிருந்து சக்தி கரகம் ஊர்வலம் கோவிலுக்கு வந்தது. தொடர்ந்து, மாவிளக்கு, பொங்கல் பூ ஜைகளும், மகாதீபாராதனையும் நடந்தன. நேற்று உதய கால, உச்சி கால பூஜைகள், சக்தி கரக புஷ்பாஞ்சலியும், மாலையில் மஞ்சள் நீராட்டு அம்மன்  கரகம் திருவீதி உலாவுடன் நடந்தன. இன்று காலை, 6:00 மணிக்கு உதய கால பூஜை நடக்கிறது. மதியம் மகா அபிஷேக ஆராதனையுடன் விழா  நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !