மதுரை கூடலழகர் கோவில் யானை மதுரவள்ளி மரணம்!
ADDED :3441 days ago
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் யானை மதுரவள்ளி, 53, நோய்வாய்பட்டு, நேற்று இறந்தது. காலில் ஏற்பட்ட புண், பல ஆண்டுகளாக ஆறாமல் இருந்தது. கோவில் பின்புறம், யானை அறையில் மதுரவள்ளிக்கு, கால்நடை மருத்துவர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந் தார். எனினும், காலை, மாலை நடைபயிற்சிக்கு வசதியாக, தென்னை நார் கழிவுகள் பரப்பி, மதுரவள்ளிக்கு நடைபயிற்சி அளித்தனர்; நடக்க முடிய õமல் சிரமம் அடைந்தது. இதையடுத்து, சில மாதங்களாக, வெளியில் அழைத்து செல்வதை தவிர்த்தனர். உணவு, தண்ணீர் உட்கொள்ளாமல் ÷ சார்வாக இருந்த மதுரவள்ளி, நேற்று மாலை 5:00 மணிக்கு இறந்தது. கோவில் ஊழியர்கள், பக்தர்கள் மதுரவள்ளிக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். கோவிலுக்கு சொந்தமான ஆண்டாள்புரம் நந்தவனத்தில், நேற்றிரவு உடல் அடக்கம் செய்யப்பட்டது.