உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளித்தலை பெரிய காண்டியம்மன் கோவில் விழா

குளித்தலை பெரிய காண்டியம்மன் கோவில் விழா

குளித்தலை: குளித்தலை அருகே, சிவாயம் தெற்கு ஊராட்சி ஆதனூரில் பெரியக்காண்டியம்மன், கருப்பசாமி, காளியம்மன் கோவில்கள் தனித்தனியாக உள்ளது. இந்தாண்டு முப்பூஜை திருவிழா, ஐந்து நாட்கள் நடந்தது. முதல் நாள் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து அனைத்து வீடுகளிலும் தெளித்தனர். இரவு பெரியக்காண்டியம்மன், அங்காளம்மன், கன்னிமார், பேச்சாயி மற்றும் தங்காள் ஆகிய சாமிகளுக்கு கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடந்தது. நள்ளிரவு, 12 மணிக்கு சேவல், ஆடு, பன்றி ஆகியவற்றை சாமிக்கு காவல்கொடுத்து முப்பூஜை செய்தனர். இரண்டாம் நாள் கிடா வெட்டி, பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மூன்றாம் நாள் பெரியக்காண்டியம்மன், அங்காளம்மன், கன்னிமார், பேச்சாயி மற்றும் தங்காள் ஆகிய சாமிகளின் கரகங்கள் கலைக்கப்பட்டு, சாமிகளுக்கு வழி அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. அன்று பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து வந்து காளியம்மனுக்கு ஊற்றி சிறப்பு அபி ?ஷகம் செய்தனர். நான்காம் நாள் காளியம்மனுக்கு அங்கபிரசவம் செய்தல், கிடா வெட்டி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செய்தனர். ஐந்தாம் நாள் பக்தர்கள் மஞ்சள் நீராட்டுடன் அனைத்து சாமிகளுக்கும் வழி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !