உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரிய கண்டியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

பெரிய கண்டியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

பொங்கலூர் : பொங்கலூர், சக்தி நகரில் உள்ள பெரிய கண்டியம்மன் கோவிலில், புதிதாக கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன; வியாச விநாயகர், பொன்னர் சங்கர், தங்காயி, வைமலை சாம்புவன் ஆகிய மூர்த்திகளுக்கு, புதிதாக சன்னதிகள் அமைக்கப்பட்டன. இக்கோவில் கும்பாபிஷேக விழா, 24ல், துவங்கியது. 25ல், மஹா கணபதி ஹோமம், புனித தீர்த்தங்கள் அழைத்தல், புதிய மூர்த்தி கண் திறப்பு, கோபுர கலசம் வைத்தல், கோ பூஜை ஆகியன நடைபெற்றன. நேற்று காலை, இரண்டாம் கால யாக பூஜை, 108 வேள்வி ஆகியன நடைபெற்றன. தொடர்ந்து, காலை, 8:15க்கு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பரிவார மூர்த்திகள், பெரிய கண்டியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின், அபிஷேகம், தச தானம், தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !