உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஸ்திகரான நாத்திகர்!

அஸ்திகரான நாத்திகர்!

சுவாமி விவேகானந்தர் சென்னை வந்தபோது, அவருடன் விவாதம் புரிய கிறிஸ்தவக் கல்லுõரி பேராசிரியரான சிங்காரவேலு முதலியார் வந்திருந்தார். அவர் ஒரு நாத்திகர். இந்து மதத்தின் மீது குறை கூறி வாதத்தை முன் வைத்தார். விவேகானந்தரோ, அடிப்படை வேதாந்த உண்மைகளை விளக்கமாக எடுத்துரைத்தார். சிங்காரவேலு முதலியார் அதனை ஏற்றுக் கொண்டதோடு, நீண்டகாலமாக நாத்திகம் பேசி வந்த தன்னை விவேகானந்தர், ஒரே நாளில் மனம் மாற்றி விட்டதாக கூறி மகிழ்ந்தார். ஆன்மிக சேவையில் ஈடுபட முன்வந்தார். சென்னையில் துவங்கிய பிரபுத்தபாரதம் என்னும் வேதாந்த பத்திரிகையின் கவுரவ நிர்வாகியாக அவரை விவேகானந்தர் நியமித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !