பாகூர் மூலநாதர் கோவிலில் அன்னாபிஷேகம்
ADDED :18 hours ago
பாகூர்: பாகூர் வேதாம்பிகை சமேத ஸ்ரீமூலநாதர் சுவாமி கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமி தினமான நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி, காலை 6:00 மணிக்கு வேதாம்பிகையம்மன், மூலநாதர், பாலவிநாயகர், முருகர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூலநாதர் சுவாமிக்கு அன்னம், காய்கறி மற்றும் பழங்களால் அபிஷேகம் செய்து, அன்னாபிஷேகம், இரவு 7:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. சுவாமியின் திருமேனியில் உள்ள அன்னம் ஒரு பகுதி கலைத்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.