வரதராஜ பெருமாள் கோவில் திருக்கோடி ஏற்றும் விழா
ADDED :3454 days ago
சேந்தமங்கலம்: நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் திருக்கோடி ஏற்றும் விழா இன்று நடக்கிறது. சேந்தமங்கலம் தாலுகா நைனாமலையில், வரதராஜ பெருமாள் கோவிலும், அடிவாரத்தில் பாதமண்டப ஆஞ்சநேயர் கோவிலும் உள்ளது. அதில் அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளும் நடக்கிறது. இக்கோவிலில், கடந்த, 15ம் தேதி, சக்தி அழைத்து காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து, நேற்று அதிகாலை, 5 மணிக்கு, கோவில் வழிபாட்டு தளங்களில், கங்கணம் கட்டியவர்கள் பந்தம் எடுத்து ஊர்வலம் வந்து, மதியம், ஒரு மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். இன்று பொங்கல் படையலும், இரவு நைனாமலை கோவிலில் திருக்கோடி ஏற்றுதல் நிகழ்ச்சியும், நாளை (29ம் தேதி) கிடா வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துதலும் நடக்கிறது.