உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோடை விடுமுறையை முன்னிட்டு பழநியில் குவிந்த பக்தர்கள்!

கோடை விடுமுறையை முன்னிட்டு பழநியில் குவிந்த பக்தர்கள்!

பழநி: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க உள்ளதால், நேற்று பழநியில் பக்தர்கள் குவிந்தனர். கோடை விடுமுறையை முன்னிட்டு, பழநி மலைக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். ஜூன், 1ல் பள்ளிகள் திறக்க உள்ளதால், நேற்று ஏராளமான வெளியூர் பக்தர்கள் தீர்த்தக்குடங்கள், காவடிகள், பால்குடங்கள் உடன் குவிந்தனர். வெளிப்பிரகாரம் வரை நீண்ட வரிசையில், நான்கு மணி நேரம் காத்திருந்து, பொது தரிசன வழியில் மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !