உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தானந்தா சுவாமியின் குருபூஜை விழா

சித்தானந்தா சுவாமியின் குருபூஜை விழா

புதுச்சேரி: கருவடிக்குப்பம் சித்தானந்தா சுவாமி கோவிலில், குரு சித்தானந்த  சுவாமியின் 179வது ஆண்டு குருபூஜை விழா நடந்தது. புதுச்சேரி க ருவடிக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற சித்தானந்தா சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் 179வது ஆண்டு குரு பூஜை விழா நேற்று முன்தினம் கலச  பிரதிஷ்டை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது.நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ருத்திர ஜபம் நடந் தது. அதைத்தொடர்ந்து, காலை 7:00 மணிக்கு குரு சித்தானந்தா சுவாமிக்கு மகா அபிஷேகம் நடந்தது.  9:00 மணிக்கு  பூர்ணாஹூதி, கலச புறப்பாடு,  10:00 மணிக்கு சுவாமிகளுக்கு கலசாபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. இரவு 10:00  மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !