பாலுார் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
ADDED :3531 days ago
நடுவீரப்பட்டு: பாலுார் திரவுபதியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடந்தது. கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 23ம் தேதி பொன்னியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் வைத்து அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. 24ம் தேதி பக்காசூரனுக்கு அன்னம் வழ ங்குதல் மற்றும் சாகை வார்த்தல் நடந்தது. 25ம் தேதி திரவுபதியம்மனுக்கும் அர்ச்சுனனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. 26ம் தேதி இரவு சுவாமி வீதியுலா நடந்தது.தொடர்ந்து 27ம் தேதி காலை விநாயகர், திரவுபதியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடந்தது. இரவு அம்மன் வீதியுலா நடந்தது.