உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத்திய ஞான சபை திறப்பு

சத்திய ஞான சபை திறப்பு

மதுரை: மதுரை அழகர்கோவில் ரோடு அரும்பனுார் விலக்கு அருகே வள்ளலார்நகரில் சத்திய ஞான சபை திறப்பு விழா நடந்தது. சன்மார்க்க கொடியை நிர்வாகி ஜவஹர்லால் ஏற்றினார். கட்டடத்தை நித்தியானந்தம் திறந்து வைத்தார். தயாமதி குழுவினர் அருட்பா பாடல்களை பாடினர். சத்திய ஞான தீபத்தை அறங்காவலர் சண்முகவள்ளி ஏற்றினார். மகாலட்சுமி மற்றும் பலர் பேசினர். ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் தர்மலிங்கம், அறங்காவலர் சிவசுப்பிரமணியன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !