ஹரிஹர புத்திர அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா!
ADDED :3531 days ago
மேலுார்: மேலுார் அருகே சாத்தமங்கலத்தில் ஹரிஹர புத்திர அய்யனார் கோயில் உள்ளது. இங்கு ஜூன் மாதம் புரவி எடுப்பு திருவிழா நடக்கும். இதை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர். நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக நேற்று குதிரைகள் அனைத்தும் இ.மலம்பட்டியில் இருந்து 12 கி.மீ., துாரம் சுமந்து வந்து சாத்தமங்கலம் மந்தையில் வைக்கப்பட்டது. இன்று(மே 31) மந்தையில் இருந்து கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். அங்கு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபடுவர்.