உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீராஞ்சநேய சுவாமி கோவிலில் வரும் 6ல் தீமிதி திருவிழா

வீராஞ்சநேய சுவாமி கோவிலில் வரும் 6ல் தீமிதி திருவிழா

ஊத்துக்கோட்டை: வீராஞ்சநேய சுவாமி கோவிலில், அனுமன் ஜெயந்தியை ஒட்டி, வரும், 6ம் தேதி, தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. பூண்டி  ஒன்றியம், வெலமகண்டிகை கிராமத்தில் உள்ளது வீராஞ்சநேய சுவாமி கோவில். இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், வைகாசி மாதம், அனுமன்  ஜெயந்தி விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு, இன்று, அனுமன் ஜெயந்தி விழா துவங்குகிறது. காலை, 10:00 மணிக்கு கலச ஸ்தாபனம்,  துவஜ ஹோமம், சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும்.  காலை, 10:00 மணி முதல், 11:00 மணி வரை சகஸ்ரநாம  பாராயணமும், தொடர்ந்து மதியம், 2:00 வரை, பஜனை குழுக்களால் பஜனை பாடல்கள் பாடப்படும். மதியம், 2:00 மணி முதல், மாலை, 6:00 மணி  வரை ஹரிகதைகானம் நடைபெறும். வரும், 9ம் தேதி வரை நடைபெறும் விழாவில், வரும், 6ம் தேதி தீமிதி திருவிழா நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !