பகவதியம்மன் கோவில் விழா நிறைவு
ADDED :3425 days ago
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகவதியம்மன் கோவில் விழா, மஞ்சள் நீராட்டுடன் நிறைவு பெற்றது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தில் உள்ள பகவதியம்மன் கோவில் திருவிழா மஞ்சள் நீராட்டுடன் முடிவடைந்தது. ஆண்டுதோறும், வைகாசி திருவிழா இக்கோவிலில் நடப்படு வழக்கம். அதன்படி, கடந்த, 22ம் தேதி காவிரி ஆற்றில் கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, நான்கு டன் எடையுள்ள பெரிய மரத்திலான தேரில் அம்மன் எழுந்தருளினார். நேற்று முன்தினம் மாலை பகதியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள் மற்றும் மங்களப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின், பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மஞ்சள் நிராட்டுதலுடன், கரகம் ஆற்றுக்கு எடுத்துச் செல்லுதடன் விழா நிறைவடைந்தது.