உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை முருகன் கோவிலில் அடிப்படை வசதி மேம்படுத்தப்படுமா?

சென்னிமலை முருகன் கோவிலில் அடிப்படை வசதி மேம்படுத்தப்படுமா?

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு மலை அடிவாரத்தில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தும் கொட்டகை, குளியலறை, கழிவறைகள் மற்றும் வாகன டிக்கெட் வழங்கும் இடம், காத்திருப்பு கூடங்கள் உள்ளன. ஆனால் இவை சரியாக பராமரிக்கப்படுவதில்லை. மழை பெய்தால் முடி காணிக்கை செலுத்தும் இடத்தில், சுற்றிலும் தண்ணீர் தேங்கி உள்ளே புகுந்து விடுகிறது. பக்தர்கள் காத்திருக்கும் கொட்டகையில், உட்காரும் வசதி இல்லை. பிரசித்தி பெற்ற கோவிலாக இருந்தும், அடிப்படை வசதிகளே சரிவர இல்லாததால், பக்தர்கள் அவதிப்பட நேரிடுகிறது. மேலும் ஐந்து ஆண்டுகளாக, கோவில் அறங்காவலர் நியமிக்கப்படவில்லை. பக்தர்களின் கோரிக்கை நிறைவேறாமல் இருப்பதற்கு இதுவே காரணமாக உள்ளது. அறங்காவலரை நியமித்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !