ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோயிலில் மறுபூஜை பாலாபிஷேகம்
ADDED :3530 days ago
கொடைக்கானல்: கொடைக்கானல் ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோயிலில் மறுபூஜை பாலாபிஷேக விழா நேற்று நடந்தது. கோயிலில் மே 10ந்தேதி கொடியேற்று, காப்புக்கட்டு விழாவுடன் திருவிழா துவங்கியது. மின் விளக்கு அலங்கார சப்பர பவனியில் அம்மன் பல்வேறு இடங்களுக்கும் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் சக்தி கரகம், மாவிளக்கு, அக்னிசட்டி, பொங்கலிடுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று அம்மனுக்கு மறுபூஜை, பாலாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து பால்குடங்களை சுமந்து சென்றனர். விழாவில் நகராட்சி தலைவர் ஸ்ரீதர், விழாக்குழு தலைவர் முரளி, செயலாளர் வேலுச்சாமி, பொருளாளர் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.