உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழக்கரை வல்லபை ஐயப்பன் கோயிலில் பாலாலயம்

கீழக்கரை வல்லபை ஐயப்பன் கோயிலில் பாலாலயம்

கீழக்கரை: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005ம் ஆண்டு நம்பியார் குருசாமி, சபரிமலை தலைமை தந்திரி கண்டரரு ராஜூவரரு ஆகியோரால் கும்பாபிஷேகம் நடந்தது.


வருகிற 2017ல் நடைபெறும் கும்பாபிஷேகத்திற்கான பாலாலய பூஜை நேற்று காலை 7 மணிக்கு கேரள நம்பூதிரிகள் நாராயணன், வினோத் தலைமையில் நடந்தது. கணபதி ஹோமம் செய்யப்பட்டு, மூலவர் ஐயப்பனை அன்னதான மண்டபத்தில் எழுந்தருளச் செய்யும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் பஜனை, சரணகோஷம் பாடினர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை குருசாமி மோகன்சாமி, வல்லபை ஐயப்பா சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !