புகழிமலை முருகன் கோவிலில் வைகாசி கிருத்திகை கோலாகலம்
ADDED :3452 days ago
வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் புகழிமலை முருகன் கோவிலில், வைகாசி கிருத்திகை முன்னிட்டு சந்தனம், இளநீர், தயிர், பன்னீர், திரவியப்பொடிகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரங்கள் செய்யப்பட்டு, முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிறகு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, இரவு, 7 மணியளவில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகன் காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.