உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திந்திரிணீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்

திந்திரிணீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்

திண்டிவனம்: திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் நடந்த திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திண்டிவனம் அப்பர்சாமி உழவாரப்பணிக்குழு சார்பில் திந்திரிணீஸ்வரர் கோவிலில் நேற்று காலை திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. திருக்கழுக்குன்றம், சதாசிவ பரபிரம்ம சிவனடியார் திருக்கூட்டம், திருவாசக சித்தர் சிவதாமோதரன் திருவாசகம் பாடினார். முற்றோதல் நிகழ்ச்சியில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். முன்னதாக, நேற்று முன்தினம் இரவு ௭.௩௦ மணிக்கு திண்டிவனம் அப்பர்சாமி உழவாரப்பணிக்குழு சார்பாக சிவபக்தர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !