பேரூரில் சமஷ்டி உபநயனம்!
ADDED :3452 days ago
கோவை: சமஷ்டி உபநயனம் நிகழ்ச்சி, பேரூரில் நடந்தது. கோவை தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், நடந்த நிகழ்ச்சிக்கு, சங்க மாநிலத் தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். 23 குழந்தைகளுக்கு புதிதாக பூணுால் அணிவிக்கப்பட்டது. சங்க மாவட்டத் தலைவர் சந்தானம், பொதுச்செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர்.