உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரநாராயண பெருமாள் கோவிலுக்கு வானமாமலை ஜீயர் சுவாமி வருகை!

வீரநாராயண பெருமாள் கோவிலுக்கு வானமாமலை ஜீயர் சுவாமி வருகை!

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் வீரநாராயண பெருமாள் கோவிலுக்கு திருநெல்வேலி வானமாமலை ஜீயர் சுவாமி வருகை தந்தார். காட்டுமன்னார்கோவில் வீரநாராயண பெருமாள் திருக்கோவிலுக்கு திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி தோத்தாத்ரி மடம்  (வானமாமலை) ஸ்ரீமகரகவி கலியன் ராமானுஜ ஜீயர் சுவாமி வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து, குப்பங்குழி சதுர்வேதி மங்கலம் வீற்றிருந்த பெருமாள் கோவில் மற்றும் ஸ்ரீமத் நாதமுனி திருமாளிகைக்கு எழுந்தருளி, பெருமானுக்கு மங்களா சாசனம் செய்தார். முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் தோத்தாத்ரி மற்றும் மடத்தின் சிஷ்யர்கள், கோவில் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !