உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்நாரியப்பனுாரில் திருத்தல கொடியேற்று விழா!

மேல்நாரியப்பனுாரில் திருத்தல கொடியேற்று விழா!

சின்னசேலம்: சின்னசேலம் புனித அந்தோணியார் திருத்தலத்தில், திருவிழாவை முன்னிட்டு கொடியற்றும் நிகழ்ச்சி நடந்தது. சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுாரில் பிரசித்திப்பெற்ற புனித அந்தோணியார் திருத்தலம் உள்ளது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் திருவிழா நடைபெற்று வருகிறது.  இந்தாண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு பங்குதந்தை சிங்கராயன் கொடியேற்றி வைத்து திருவிழாவை துவக்கி வைத்தார். வரும் 13ம் தேதி பெரிய தேர்பவனி நடக்கிறது.  விழா ஏற்படுகளை பங்குதந்தை பால்ராஜ் தலைமையிலான அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், காரியக்காரர்கள், பங்கு மக்கள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.





தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !