உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வலம்புரி விநாயகர் கோவிலில் சிலைகளுக்கு பிரதிஷ்டை

வலம்புரி விநாயகர் கோவிலில் சிலைகளுக்கு பிரதிஷ்டை

விழுப்புரம்: பில்லுார் வலம்புரி விநாயகர் கோவிலில் சுவாமி சிலைகளுக்கு பிரதிஷ்டை நிகழ்ச்சிகள் துவங்கியது. விழுப்புரம் அடுத்த பில்லுார் வலம்புரி விநாயகர், முருகன், பூரணி புஷ்கலா சமேத கலிவுராய ஐயனாரப்பன், விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி, மாரியம்மன், பிடாரியம்மன், திரவுபதியம்மன், கங்கையம்மன், அங்காளபரமேஸ்வரி அம்மன், ஐயப்பன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு வரும் 9ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது.  விழாவையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, மகா கணபதி ேஹாமம், லஷ்மி ேஹாமம், தனபூஜை, பூர்ணாஹூதி நடந்தது.  பின்னர் பகல் 12:00 மணிக்கு புதிய சுவாமி சிலைகள் கரிக்கோலம், மாலை 5:00 மணிக்கு வாஸ்துசாந்தி ேஹாமம், இரவு 7:30 மணிக்கு ஸ்வர்ணபந்தனம், சுவாமி சிலைகள் பிரதிஷ்டை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில், விழா குழு தலைவர் கலிவுஉடையார், நிர்வாகிகள் ராமசாமி, சுப்ராயர், கருணாமூர்த்தி, சந்திரசேகர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !