காரியாபட்டி மாரியம்மன் கோயில் விழா
ADDED :3453 days ago
காரியாபட்டி: காரியாபட்டியில் முக்குரோடு மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவில், பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. முக்கிய நிகழ்ச்சியாக திருவிளக்கு பூஜை,அக்னி சட்டி எடுத்தல், முளைப்பாரி ஊர்வலம், மாவிளக்கு எடுத்து பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கிராமிய கலை நிகழ்ச்சி, கரகாட்டம், நாடகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.