உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா

சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா

செஞ்சி: செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் திருத்தேர் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்.

இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா, கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. நேற்று காலை 7:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு அலங்காரமும், விஷேச பூஜையும் நடந்தது. 8:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது. இதில் செஞ்சி எம்.எல்.ஏ., மஸ் தான், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், தொழிலதிபர் கோபிநாத், கமலக்கன்னியம்மன் கோவில் அறங்காவலர் அரங்க ஏழுமலை, ஒன்றிய கவுன்சிலர் செண்பகப்பிரியா விஜயகுமார், ஊராட்சித் தலைவர் ரங்கநாதன், தேர் திருப்பணிக்குழுவினர் உட்பட பலர் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். பூஜைகளை நாராயணன், குமார் பட்டாச்சாரியார்கள் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !