சோழவந்தான் மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்
ADDED :3453 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி கொடி மரத்திற்கு பூஜாரி கணேசன் தீபாராதனைகள் செய்தார். பின் அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் மஞ்சள்நீராடி காப்பு கட்டினர். அன்னதானம் வழங்கப்பட்டது. எம்.வி.எம்., குழுமத் தலைவர் மணி முத்தையா, இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளச்சாமி, தேர் திருப்பணிக் குழுத் தலைவர் சுப்பிரமணியம் மற்றும் பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் லதா மற்றும் பலர் செய்திருந்தனர்.