மாடக்குளம் வேடன் முருகன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3453 days ago
மதுரை: மதுரை மாடக்குளம் வேடன் முருகன் கோயிலில் இன்று (ஜூன் 8) காலை 10.35 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி ஜூன் 5ல் விநாயகர் வழிபாடு நடந்தது. நேற்று விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, முதல் கால யாகபூஜை நடந்தது. இன்று காலை இரண்டாம் காலை யாகபூஜை நடக்கிறது. காலை 10.35 மணிக்கு விமான கும்பாபிஷேகம், காலை 10.45 மணிக்கு மூலவர் கும்பாபிஷேகம் நடக்கிறது. அன்னதானமும் வழங்கப்படுகிறது.