உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதர்மண்டி கிடக்கும் முருகன் கோவில் குளம்!

புதர்மண்டி கிடக்கும் முருகன் கோவில் குளம்!

கும்மிடிப்பூண்டி: இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் குளத்தை, சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.  கும்மிடிப்பூண்டி ஞானவேல் முருகன் கோவில், இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த கோவிலின் முகப்பில், பரந்து  விரிந்துள்ள குளத்தை, பராமரிக்க தவறியதால், புதர் மண்டி கிடக்கிறது. கோவில் குளத்தின் உட்புறத்தையும், வெளிப்புறத்தையும் துாய்மையாக  வைத்திருக்க வேண்டும் என, அங்கு வரும் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !