உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடுவாஞ்சேரி வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

கூடுவாஞ்சேரி வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில், பத்மாவதி சமேத வெங்கடேச பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடைபெற்றது. கூடுவாஞ்சேரியை அடுத்த, மகாலட்சுமி நகர் விரிவு - 2 பகுதியில், அமைந்துள்ள பத்மாவதி சமேத வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் நேற்று, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு, 6ம் தேதி முதல், பல விதமான வழிபாடுகள், சேவைகள் நடைபெற்றன. கோவிலில் எழுந்தருளியுள்ள, மூலவர் சன்னிதி, ஆண்டாள், கருடன், அனுமார் மற்றும் பரிவாரமூர்த்திகள் லட்சுமி நரசிம்மர், ஹயகிரீவர், நாராயணர், வராகர் மற்றும் தன்வந்திரி சுவாமி சன்னிதிகளுக்கு, நேற்று காலை, 9:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நந்திவரம், கூடுவாஞ்சேரி பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !