உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலுாத்தங்கரை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்!

பாலுாத்தங்கரை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்!

சிதம்பரம்: பாலுாத்தங்கரை துலுக்கானத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. சிதம்பரம் அடுத்த பாலுாத்தங்கரை துலு  க்கானத்து மாரியம்மன் கோவில் மற்றும் பரிவார சுவாமி சன்னதிகள் திருப்பணிகள் நடைபெற்று, கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கடந்த 5ம் ÷  ததி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், யாகசாலை பூஜை நடந்தது. 6ம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகள் துவங்கி, நான்கு கால யாக சாலை   பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று காலை சிறப்பு தீபாராதனை நடைபெற்று, கடம் புறப்பாடு செய்து காலை 10.30 மணிக்கு கோவில் விமானம்,   துலுக்கானத்து மாரியம்மன் மற்றும் பரிவார சன்னதிகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி   தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !