சிதம்பரம் பால விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :3773 days ago
சிதம்பரம்: சிதம்பரம் பாலவிநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சிதம்பரம் திரு.வி.க. தெரு பால விநாயகர் கோவிலில் திருப்பணிகள் முடிந்து, மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி, கடந்த 7ம் தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து இரண்டு கால யாகசாலை பூஜைகள், தீபாராதனை நடந்தது. நேற்று காலை சிறப்பு தீபாராதனை நடைபெற்று, 6.45 மணிக்கு கடம் புறப்பாடு செய்து, 7.15 மணிக்கு பால விநாயகர் கோவில் விமானம், சன்னதிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.