உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்து மாரியம்மன் கோவில் ராஜகோபுர திருப்பணி பூஜை

முத்து மாரியம்மன் கோவில் ராஜகோபுர திருப்பணி பூஜை

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி முத்து மாரியம்மன் கோவில் ராஜகோபுர வாசற்படி அமைக்கும் திருப்பணி பூஜை நடந்தது. விக்கிரவாண்டி முத்து மாரியம்மன் கோவில் திருப்பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக 27 அடி உயர ராஜ கோபுரம் கட்டுமான பணி நடந்து, ÷  காபுர வாயிற்படி அமைக்க, சிறப்பு பூஜை நேற்று காலை 6 மணிக்கு நடந்தது. முதலில் கணபதி பூஜை நடந்து, பின்னர் வாசற்படிகளுக்கு புனித நீர்   ஊற்றி மஞ்சள், குங்குமம் வைத்து, நவரத்தினங்கள் வைத்து வாயிற்படியை அமைத்தனர். பூஜைகளை கதிர்காமம் ஞான சம்பந்தம் சிவாச்சாரியார்   செய்தார். நிகழ்ச்சியில் ஸ்பதி சம்பந்தம், வாயிற்படி உபயதாரர் மேல் பட்டாம் பாக்கம் அரிகிருஷ்ணன், திருப்பணி குழுவைச் சேர்ந்த ரவி, கிரு  ஷ்ணமூர்த்தி, ஜெயராமன், பலராமன், கந்தசாமி, நந்தன், அரிகரன், பூசாரி பன்னீர்  மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !