சித்திரை முதல் சனி: அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :175 days ago
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் கரி வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.