உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த காவேரிப்பட்டணம் அருகே, திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த காவேரிப்பட்டணம் அருகே, நெடுங்கல் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி கடந்த, 6 ம் தேதி காலை, 9 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, மாலை, 6 மணிக்கு, தீபாராதனை, முதற்கால யாக பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. 7ம் தேதி காலை, 9 மணிக்கு, இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று காலை, நான்காம் கால யாக பூஜையை தொடர்ந்து, மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !