சித்துவார்பட்டி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா
ADDED :3452 days ago
வடமதுரை: பழைய சித்துவார்பட்டியில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா இரண்டு நாட்கள் நடந்தது. சமயபுரம் மாரியம்மன் கோயில் தீர்த்தம் கிராம வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் கிராம தெய்வ வழிபாடுகள் நடந்தது. பக்தர்கள் கோயில் முன்பாக பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா ஏற்பாட்டினை ஊர் பெரியதனக்காரம் ஏழுமலை, கோயில் பூசாரிகள் அழகர், மயில்வாகனம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.