உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை மாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம்

உடுமலை மாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம்

உடுமலை: உடுமலை விருகல்பட்டிபுதுார் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம், இன்று, நடக்கிறது. குடிமங்கலம் ஒன்றியம், விருகல்பட்டிபுதுாரிலுள்ள மாரியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிேஷக விழா, நான்கு நாட்களுக்கு முன் துவங்கியது. மகாகணபதி ேஹாமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி நிகழ்ச்சிகளை தொடர்ந்து, நேற்றுமுன்தினம், முளைப்பாலிகை இடுதல், விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பிரவேசம் ஆகிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து, முதற்கால வேள்வி நிகழ்ச்சி நடந்தது. நேற்று, காலை, 9:00 மணிக்கு, மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, மாலை, 5:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, புண்யாகம், பஞ்சகவ்யம் ஆகிய பூஜைகளும், இரவு, 9:30 மணிக்கு, விநாயகர், மாரியம்மன் பரிவாரங்கள் யந்திரஸ்தாபனம் நடந்தது. இன்று, காலை 8:30 மணிக்கு, வேதபாராயணம், காலை 10:30 மணிக்கு, மகாகும்பிேஷகம் மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !