உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காதர்வேடு கொம்மாத்தம்மன் கோவில் விழா

காதர்வேடு கொம்மாத்தம்மன் கோவில் விழா

ஊத்துக்கோட்டை: காதர்வேடு, கொம்மாத்தம்மன் கோவிலில், ஐந்து நாள் திருவிழா, நேற்று மாலை, அம்மனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. வெங்கல் அடுத்த, காதர்வேடு கிராமத்தில் உள்ளது கொம்மாத்தம்மன் கோவில். இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், வைகாசி மாதம் ஐந்து நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விழா, நேற்று, அம்மனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. திரளான பக்தர்கள், அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். இதை தொடர்ந்து, வரும் 12ம் தேதி, மதியம் 12:00 மணிக்கு, கூழ்வார்த்தல் விழாவும், 13ம் தேதி, காலை, 6:00 மணிக்கு, பந்தக்கால் நிகழ்ச்சியும், 15ம் தேதி இரவு அம்மன் வீதியுலா வந்து பகதர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் கடைசி நாளான வரும், 16ம் தேதி, மதியம் 1:30 மணிக்கு அம்மனுக்கு படையல் வைத்து வழிபடுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !