பாஞ்சாலி அம்மன் கோவில் அக்னி மகோற்சவ விழா
ADDED :3452 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கீழ்புதுப்பாக்கம் கிராமத்தில், அன்னை பாஞ்சாலி அம்மன் கோவிலில், அக்னி மகோற்சவ விழா, கடந்த மே, 23 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் பிற்பகல், 2 மணி முதல் மாலை, 5 மணி வரை விளாநல்லூர் சாரங்கபாணி (எ) சதீஷ் குமாரின் மகாபாரத சொற்பொழிவு நடந்து வருகிறது. மேலும் இரவு, 10 மணிக்கு, மகாபாரத கட்டை கூத்தும் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் அர்ஜூனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சியும், இரவு வீராட பருவம் கீசகன் வதம் கட்டை கூத்து நாடகமும் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கற்றனர்.