அண்ணன்பெருமாள் கோயில் மஹாஸம்ப்ரோக்ஷ்ணம்: பக்தர்கள் தரிசனம்!
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெள்ளக்குளம் என்றழைக்கப்படும் அண்ணன்பெருமாள் கோயில் கிராமத்தில் அருள்மிகு அலர்மேல் மங்கை நாயிகா ஸமேத ஸ்ரீ ஸ்ரீ நிவாஸ ப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 108 வைணவத் திருத்தலங்களுல் ஒன்றானதும், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான இந்த தலத்தில் தான் ஞானஸ்வரூ பியான குமுதவல்லி நாச்சியார் அவதரித்தார்.இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோயிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு மஹாஸம்ப்ரோக்ஷ்ணம் நடைபெற்றது.இதனை முன்னி ட்டு கடந்த 5ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டன. சர்வசாதகம் பார்த்தன்பள்ளி சேஷாத்திரி பட்டாச்சாரியார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் யாகசாலை பூஜைகளை நடத்தினர். இன்று காலை யாகசாலை பூஜைகள் முடிந்து 6: 30 மணிக்கு பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்து பெருமாள், தாயார் சன்னதி விமானங்கள் மற்றும் ராஜ கோபுரத்தை அடைந்தது. 7:30 மணிக்கு, மிதுன லக்கனத்தில் மாதவ பட்டாச்சாரியார் தலைமையிலானோர் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்ற மஹாஸம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. இதில் நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி, சீர்காழி எம்.எல்.ஏ.பாரதி, உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை சே வித்தனர். டி.எஸ்.பி. வெங்கடேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மஹாஸம்ப்ரோக்ஷணத்திற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் கோபி, கோயில் பணியாளர்கள் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.