திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருடாபிஷேகம்
ADDED :3579 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருடாபிஷேகம் நேற்று நடந்தது. கோயிலில் கும்பாபிஷேகம் நடந்த நட்சத்திர தினத்தன்று, ஆண்டுதோறும் வருடாபிஷேகம் நடக்கிறது. நேற்று காலை கோயில் விசாக கொறடு மண்டபத்தில் தங்கம், வெள்ளி குடங்கள், 16 சொம்புகளில் புனிதநீர் நிரப்பி வைத்து ஒரு கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு சாம்பிராணி தைலம் சாத்துப்படியானது. மூலவர் கரத்திலுள்ள வேலுக்கு அபிஷேகம் முடிந்து அனைத்து மூலவர்களுக்கும் தீபாராதனை நடந்தது.