உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூசிவாக்கம் படவேட்டம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம்!

மூசிவாக்கம் படவேட்டம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம்!

படாளம்: படாளம் அடுத்த மூசிவாக்கத்தில் எழுந்தருளியுள்ள படவேட்டம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.  மதுராந்தகம் ஒன்றியம், மூசிவாக்கத்தில் ரேணுகாதேவி என, அழைக்கப்படும் படவேட்டம்மன் கோவில் உள்ளது.  திருமலை வையாவூர் பிரசன்ன  வெங்கடேச பெருமாள் திருக்கோவிலுக்கு நேர் கிழக்கே உள்ள மூசிவாக்கம் கிராமத்தில் இக்கோவில் நிர்மானிக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் ÷ நற்று காலை, 10:00 மணிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. நீலமங்கலம், யாஸ்த்ராலயம்  ப்ரஹ்மயோகானந்த் மகா  சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த கும்பாபிஷேகத்தில் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து, கொண்டு  அம்மனின் அருளாசி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !