உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் அருகே கோபுர கலசங்கள் திருட்டு!

திருவள்ளூர் அருகே கோபுர கலசங்கள் திருட்டு!

பெருமாள்பட்டு: திருவள்ளூர் அருகே, அம்மன் கோவிலில், கோபுர கலசங்கள் திருடு போனது. திருவள்ளூர் அடுத்த, பெருமாள்பட்டு கிராமத்தில்  உள்ளது மூல ஸ்ரீஅம்மன் கோவில். மிகவும் பழமைவாய்ந்த கோவிலின் கோபுரத்தில், செம்பு மற்றும் பித்தளை போன்ற உலோகத்தாலான 2 அடி  உயரம் கொண்ட, 5 கலசங்கள் பொருத்தப்பட்டு இருந்தன. இந்நிலையில், நேற்று காலை, கோவிலை சுத்தப்படுத்தும் பணிக்கு வந்த பணியாளர்கள்,  கோபுர கலசங்கள் இல்லாததை கண்டனர். தகவலறிந்து செவ்வாப்பேட்டை போலீசார், நேரில் சென்று விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !