வேதம் நிறைந்த தமிழ்நாடு’ நுால் வெளியீட்டு விழா!
சென்னை: தொல்லியல் அறிஞர் டாக்டர் இரா.நாகசாமி எழுதிய, தமிழ்நாடு தி லேண்ட் ஆப் தி வேதாஸ்’ என்ற நுால் வெளியீட்டு விழா, வரும், 12ம் தேதி நடக்க உள்ளது. ஸ்ரீகிருஷ்ண கான சபா அறக்கட்டளை மற்றும் நிகழ்த்துக் கலைக்கான யக்ஞராமன் மையம், தமிழ் கலைகள் அகாடமி ஆகியவை இணைந்து, தமிழ் பண்பாட்டிற்கு வேதத்தின் பங்கு’ என்ற தலைப்பில், வரும், 12ம் தேதி மாலை, 6:00 மணியளவில், ஒரு கருத்தரங்கினை நடத்துகின்றன. இதில், தொல்லியல் அறிஞர் டாக்டர் இரா.நாகசாமி எழுதிய, தமிழ்நாடு தி லேண்ட் ஆப் தி வேதாஸ்’ என்ற ஆங்கில நுால் வெளியிடப்பட உள்ளது. இந்த நுால், தமிழ் வரலாற்றை புதிய கண்ணோட்டத்தில் அணுகுகிறது. சங்க காலம் துவங்கி, காலங்காலமாக தமிழுக்கு வேதம் ஆற்றியுள்ள தொண்டினை, வரலாற்று சான்றுகளுடன் விளக்குகிறது.
மேலும் சங்க இலக்கியங்களின் காலத்தை கணிக்கும் முறையை, டாக்டர் இரா.நாகசாமி விரிவாக ஆராய்ந்துள்ளார். அதற்கு, நாணயவியல் எவ்வளவு இன்றியமையாதது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். அந்த பணியில், தினமலர்’ நாளிதழ் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூ ர்த்தியின் பங்களிப்பை எடுத்துக் காட்டிஉள்ளார். கூடுதலாக, சோழர் காலத்தில் திகழ்ந்த குடியாட்சி, உண்மையிலேயே மக்களாட்சியாக இருந் ததையும், அதில் குறிப்பிட்ட ஜாதியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்பதையும், எந்த ஒரு ஜாதியும் பிற ஜாதியினரை அடக்கியோ, முடக்கியோ ஆளவில்லை என்பதையும் ஆதாரங்களுடன் நுாலாசிரியர் விளக்கி உள்ளார். நிகழ்ச்சியில், காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், திருப்பனந்தாள் காசித் திருமடத்தின் இளவரசு சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், ஜார்க்கண்ட் மாநில கவர்னர் நீதியரசர் ராமா ஜாய்ஸ், கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ வாணவராயர், தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம், சுதா ÷ சஷய்யன், காலஷேத்ரா பவுண்டேஷன் இயக்குனர் பிரியதர்ஷினி கோவிந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர்.