உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவசக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

நவசக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

திண்டுக்கல்: திண்டுக்கல், நேருஜி நகர் நவசக்தி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகாகும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.  ஜூன் 7ம் தேதி முதல் ஜூன் 9 நேற்று வரை நான்கு கால யாக வேள்வி பூஜைகள் நடந்தன. கணபதி ஹோமம், கோ, கன்னிகா, சுமங்கலி,  ஸ்பர்சாகுதி பூஜைகளும் நடத்தப்பட்டன. அதன் பின், காலை 9.30 மணியளவில் கும்பாபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் அலங்கார  தீபாராதனை நடத்தப்பட்டது. அர்ச்சகர்கள் கமலக்கண்ணன், பகவத் பாலாஜி தலைமை வகித்தனர். முன்னாள் நகராட்சி தலைவர்கள் நடராஜன், பசீர்  அகமது, நிர்வாக குழு உறுப்பினர் பார்கவி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !