உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் யோக ஞானதட்சிணாமூர்த்திக்கு பாலாபிஷேகம்!

திருவள்ளூர் யோக ஞானதட்சிணாமூர்த்திக்கு பாலாபிஷேகம்!

திருவள்ளூர்: திருவள்ளூர், பூங்காநகர், யோகஞான தட்சிணாமூர்த்தி கோவிலில், பாலாபிஷேகம் நடந்தது.திருவள்ளூர் அடுத்த, பூங்கா நகர், யோகஞான தட்சிணாமூர்த்தி கோவிலில் வியாழக்கிழமையான, நேற்று காலை, 10:00 மணியளவில், குரு பகவானுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில், சிவ - விஷ்ணு கோவில்களில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேலும், மணவாள நகரில் உள்ள மங்களீஸ்வரர் கோவிலில், தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !