உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமுறை ரத்தினம் பட்டம் வழங்கும் விழா

திருமுறை ரத்தினம் பட்டம் வழங்கும் விழா

சிதம்பரம்: நம்பியாண்டார் நம்பிகள் குருபூஜையையொட்டி, திருமுறை ரத்தினம்’ பட்டம் வழங்கும் விழா, திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் ÷ காவிலில் நடந்தது. -காட்டுமன்னார்கோவில் அடுத்த திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் கோவிலில் நம்பியாண்டார் நம்பிகள் குரு பூஜை விழா  நேற்று முன்தினம் நடந்தது. இதில், கிருஷ்ணகிரி வரதராஜன் அறக்கட்டளை, பொல்லாப்பிள்ளையார் அன்னதான டிரஸ்ட் சார்பில் நம்பியாண்டார்  நம்பி விருது திருமுறைரத்தினம்’ பட்டம் வழங்குதல், தேவாரத் திருத்தலங்கள்’ கையேடு வெளியீட்டு விழா நடந்தது.

கிருஷ்ணகிரி அறக்கட்டளை தலைவர் கணபதி தலைமை தாங்கினார். அன்னதான டிரஸ்ட் நிறுவன செயலாளர் வெங்கடேச தீட்சிதர் வரவேற்றார்.  மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் பங்கேற்று, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக பேராசிரியர் திருநாரையூர் செந்தில்குமார் எழுதிய தேவாரப்  பாடல் பெற்ற திருத்தலங்கள் கையேடு’ வெளியிட்டு, பேசினார்.  ஆன்மிகத்தில் சிறந்த சேவைக்காக, மதுரை ஆலவாய் அண்ணல் அறக்கட்டளை  நிறுவனர் இன்ஜினியர் மணிவாசகத்திற்கு திருவாடுதுறை ஆதீனம் கட்டளை தம்பிரான் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் திருமுறை ரத்தினம்’  பட்டம் வழங்கினார். சிதம்பரம் குருஞானசம்மந்தர் பணிமன்றத் தலைவர் சேதுசுப்ரமணியன், இன்ஜினியர்கள் திருநாரையூர் கார்த்திகேயன்,  மணிவாசகன் சிறப்புரையாற்றினர். திருப்பனந்தாள் காசி மடம் இணை அதிபர் சுந்தரமூர்த்தி சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103வது சன்னிதானம்  சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசாரிய சுவாமிகள், சிதம்பரம் மவுன மடம் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், தில்லை தமிழ் மன்றத் தலைவர்  திருநாவுக்கரசு வரதராஜன், அறக்கட்டளை பாலசுப்ரமணியன், நுாலாசிரியர் செந்தில்குமார், அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்÷ கற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !