முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3449 days ago
குன்னுார்: குன்னுார் -- ஊட்டி சாலை வெலிங்டன் பஜாரில் உள்ள முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த விழாவில், முதல் கால பூஜை , வேதபாராயணம் , நாடிசந்தானம், பிம்பசுத்தி, உட்பட பல்வேறு வழிபாடுகள் நடந்தன. தொடர்ந்து, மகா கும்பாபிஷேகம் நடந்தது. மூலவருக்கும், நாகலிங்க சுவாமி, காட்டேரி அம்மன் உட்பட பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடந்தன. பின்னர், கன்டோன்மென்ட் பகுதியில் நடந்த திருவீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடந்து வருகிறது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.