விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3449 days ago
சென்னிமலை: சென்னிமலை டவுன் அரச்சலூர் சாலையில் உள்ள மிக பழமையான விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு, புதிய கோபுரத்துடன் திருப்பணிகள் நிறைவு பெற்றது. நேற்றுமுன்தினம் காலை, 5 மணிக்கு கணபதி ஹோமம், விமான கலசம் பிரதிஷ்டை, தீபாராதனை, மாலை, 5 மணிக்கு முதற்கால யாகபூஜைகள் நடந்தன. இரவு, 9 மணிக்கு மூலவர் பிரதிஷ்டை அஷ்டபந்தனம் நடந்தது. நேற்று அதிகாலை, 4 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை, 5 மணிக்கு கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அடுத்து விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.