பாலமுருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா!
ADDED :3447 days ago
விழுப்புரம்: விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ., காலனி பாலமுருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 7 ம் தேதி காலை 7:00 மணிக்கு கரிகோலம் மற்றும் முளைப்பாரி ஊர்வலமும், மாலை திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, 8ம் தேதி காலை இரண்டாம் கால யாக சாலை பூஜை, இரவு விமான கலசம் நிறுவுதல் நடந்தது. பின், 9ம் தேதி காலை 9:15 மணிக்கு கடம் புறப்பாடு, 9:30 மணிக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, மூலவர் பாலமுருகன், ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.